உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈச்சம்பாடியில் விஜயராகவ பெருமாள் கோவிலில், 22ம் தேதி முதல், புரட்டாசி உற்சவம்

ஈச்சம்பாடியில் விஜயராகவ பெருமாள் கோவிலில், 22ம் தேதி முதல், புரட்டாசி உற்சவம்

பள்ளிப்பட்டு: ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவிலில், 22ம் தேதி முதல், புரட்டாசி மாத சிறப்பு உற்சவம் கொண்டாடப் படுகிறது. முன்னதாக, நிகமாந்த மகாதேசிகரின், 750ம் அவதார திருவிழாவும் நடைபெறும்.

பள்ளிப்பட்டு அருகே, கொற்றலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் ஈச்சம்பாடி. இந்த கிராமத்தில் அமைந்துள்ள பழமையான, விஜயராகவ பெருமாள் கோவில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. 22ம் தேதி முதல், அக்., 13ம் தேதி வரை யிலான, நான்கு சனிக்கிழமைகளில் புரட்டாசி சிறப்பு உற்சவம் நடைபெற உள்ளது. முதல் சனிக் கிழமையான, 22ம் தேதி, நிகமாந்த மகாதேசிகரின், 750ம் அவதார திருவிழா கொண்டாடப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !