பரமக்குடியில் இந்துமுன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
பரமக்குடி:பரமக்குடியில் இந்துமுன்னணி சார்பில் 25ம் ஆண்டுவிநாயகர் ஊர்வலம் நடந்தது.
செப்.13ல் இந்து முன்னணி சார்பில் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று (செப்., 13ல்) மாலை 5:00 மணிக்கு சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட 45 விநாயகர் சிலைகள் ஒன்றாக வரவழைக்கப்பட்டன.
தொடர்ந்து சந்தைக்கடை, சின்னக்கடை, காந்திசிலை,ஐந்துமுனை ரோடு, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பெரியபஜார்வழியாக சுந்தரராஜப்பெருமாள் வைகை ஆற்று படித்துறையை
அடைந்தன. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மிகப்பெரிய பள்ளம்அமைக்கப்பட்டு, லாரிகளின் மூலம் தண்ணீரை வரழைத்துசிலைகளை கரைத்தனர்.ஊர்வலத்தில் இந்துமுன்னணி,
ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., - வி.எச்.பி., -பி.எம்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்பினர், தொண்டர்கள்,பல்வேறு குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.