தேனி, மாவட்டத்தில் சதுர்த்தி ஊர்வலம்
தேனி: விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 368 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. மீதியுள்ள 138 சிலைகள் இன்று (செப்., 15ல்) சின்னமனூரில் ஊர்வலம் சென்று கரைக்கப்பட உள்ளன.
தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில், 74 சிலைகள், மாலையில் இந்து முன்னணி சார்பில், 42 சிலைகள் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து பெரியகுளம் ரோடு, பழைய
பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, அரண்மனைப்புதூர் விலக்கில் உள்ள கொட்டக்குடி ஆற்றில் கரைக்கப்பட்டது. தாலுகா வாரியாக 768 விண்ணப்பங்கள்
பெறப்பட்டன. அதில், 656 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.
112 சிலைகளுக்கு, சூழல், சட்ட ஒழுங்குபிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப் பட்டன. இன்று (செப்.,15ல்) சின்னமனூர்ல் 138 சிலைகளின் ஊர்வலம் நடக்க உள்ளது.
* வருஷநாடு: கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருஷநாடு உள்ளிட்ட பகுதிகளில் 65 சிலைகள் வருஷநாடு மெயின் ரோட்டில் ஊர்வலமாக சென்று மொட்டப்பாறை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
* கம்பம்:இந்து முன்னணி சார்பில் 64 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது. நேற்று (செப்.,14ல்) காலை அரசமரத்திலிருந்து கிளம்பிய ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், வரதராஜபுரம்,கிராமச்சாவடி வீதி, வ.உ.சி. திடல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, ஏகலூத்து ரோடு, நாட்டுக்கல், கம்பமெட்டுரோடு வழியாக மெயின் ரோடு வந்து, பின் சுருளிப்பட்டி ரோட்டில் முல்லையாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர்பழனிக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* உத்தமபாளையம்: இந்து முன்னணி சார்பில் 39 விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று (செப்., 14ல்) காலை உத்தமபாளையம் ஒன்றிய
இந்து முன்னணி தலைவர் சிவக்குமார் தலைமையில்,பா.ஜ., மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடிகார்த்திக், நகர் பா.ஜ., தலைவர் தெய்வம் பங்கேற்றனர்.
காளாத்தீஸ்வரர் கோயில் படித்துறையில் சிலைகள் கரைக்கப்பட்டன.
* ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களி லும் விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்து முன்னணி சார்பில் 33, இந்து மக்கள் கட்சி சார்பில் 37 வாகனங்களிலும் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
கொண்டமநாயக்கன்பட்டியில் துவங்கிய ஊர்வலம் மெயின் ரோடு, வைகை ரோடு வழியாக வைகை ஆற்றில் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.
* போடி டவுன்: பி.தர்மத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரத்தில் இருந்து 50 சிலைகள் வாகனங்களில் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ஊர்வலமாக காமராஜ் பஜார், கட்ட பொம்மன் சிலை, புதூர் வழியாக சென்று கொட்டகுடி ஆற்றில் கரைக்கப் பட்டன. பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜயபாண்டியன் தலைமை வகித்தார்.
கீழச்சொக்கநாதர் கோயில் அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். போடி டி.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.