உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் தாளவாடியில் சதுர்த்தி விழாவையொட்டி, சிலை கரைப்பு

சத்தியமங்கலம் தாளவாடியில் சதுர்த்தி விழாவையொட்டி, சிலை கரைப்பு

சத்தியமங்கலம்: சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில், தாளவாடியில் ஏழு இடங்களில், விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யபட்டன. சிலை கரைப்பு ஊர்வலம் நேற்று (செப்.,14ல்) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டன.

இந்து முன்னணி மாவட்டத் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். தாளவாடி நேதாஜி சர்க்கிளில் தொடங்கிய ஊர்வலம், மேள தாளத்துடன், பூஜேகவுடர் வீதி, ஆற்றுபாலம், ஓசூர் ரோடு, சாம்ராஜ்நகர் ரோடு, சத்தி ரோடு வழியாக, பஸ் ஸ்டாண்டை அடைந்தது. பின் தலமலை சாலையில் உள்ள நீரோடையில், சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் தலைமையில், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் என, 250 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !