உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலில் படி பூஜை

சென்னிமலை முருகன் கோவிலில் படி பூஜை

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், மலை கோவிலுக்கு செல்ல, 1,320 திருப்படிகள் உள்ளன. உச்சியில் தமிழ் வருடத்தை குறிக்கும் வகையில், 60 படிகள் உள்ளன. இதை பக்தர்கள் வணங்குவது வழக்கம். இந்த படிகளுக்கு, விசாக நட்சத்திர தினத்தில், திருப்படி பூஜை நடக்கிறது. விசாக நட்சத்திர தினமான நேற்று செப்.,14ல்  மாலை, இந்த பூஜை நடந்தது. ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் தீர்த்தம் தெளித்து, விளக்கேற்றி, சூடம் ஏற்றி, பக்தர்கள் வணங்கினர். சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீட அமைப்பின் சார்பாக சரவணானந்த சுவாமி, பூஜைகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !