ஈரோடு மாவட்டத்தில், விநாயகருக்கு 111 கிலோ லட்டு படையல்
ADDED :2579 days ago
ஈரோடு: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், இந்து முன்னணி, மக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறது. ஈரோடு என்.எம்.எஸ்., காம்பவுண்ட் எழுச்சி நண்பர்கள் குழு அமைப்பு சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், 111 கிலோ எடையில் ஒரே லட்டு தயாரிக்கப்பட்டு, விநாயக ருக்கு படையலிடப்பட்டது. விழாவை ஒட்டி சிறுவர், சிறுமிகளுக்கு, பாட்டுப்போட்டி, விளை யாட்டு போட்டி நடந்தது. இன்று செப்.,15ல் விநாயகர் ஊர்வலம், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.