உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானிசாகரை அடுத்த, எரங்காட்டூரில் வேல்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

பவானிசாகரை அடுத்த, எரங்காட்டூரில் வேல்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த, எரங்காட்டூரில் பழமை வாய்ந்த வேல்முருகன் கோவில் உள்ளது. இங்கு நடந்த திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 12ல், கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி தொடங்கியது. தீர்த்தக்குட ஊர்வலம், வேள்வி பூஜைகளை தொடர்ந்து, நேற்று (செப்.,14ல்) காலை யாகபூஜை நடந்தது. இதையடுத்து கோபுரங்களுக்கு, கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

காலை, 6:00 மணியளவில், கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவை, திருநெறிய தமிழ் முறைப்படி, கோவை கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் நடத்தி வைத்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !