உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலில் விநாயகர் வீதியுலா

மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலில் விநாயகர் வீதியுலா

மாமல்லபுரம்: மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவில், விநாயகர் வீதியுலா சென்றார். இக்கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் உட்பட மூன்று நாட்கள் உற்சவங்கள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலை,  அவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, மகா தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, இரவு அலங்கார விநாயகர் வீதியுலா சென்றார்.இங்குள்ள அண்ணாநகர் பகுதி, செல்வவிநாயகர் கோவிலில், 31ம் ஆண்டு சதுர்த்தி விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி,  விநாயகருக்கு, காலை, மகா தீபாராதனை; மாலை, மகா அபிஷேக, சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு, அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சுவாமி, வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !