உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வறட்சி நீங்க வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை

வறட்சி நீங்க வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை

கொடுமுடி: சிவகிரி அருகே அம்மன்கோவில், தலையநல்லூரில், பிரசித்தி பெற்ற பொன் காளியம்மன் கோவில் உள்ளது. வறட்சி நீங்கி, விவசாயம் தழைக்க வேண்டி, சிவகிரி ஆதீனம் சிவசமய பண்டித குருசுவாமிகள் தலைமையில், 1,008 திருவிளக்கு பூஜை, கோவிலில்  நேற்று நடைபெற்றது. வேட்டுவபாளையம், அம்மன்கோவில், ரங்க சமுத்திரம், சிவகிரி பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில், அம்மனுக்கு, 108 குட பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !