உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர் கோவிலில் குலச்சிறை நாயனார் குருபூஜை

விஸ்வேஸ்வரர் கோவிலில் குலச்சிறை நாயனார் குருபூஜை

திருப்பூர்: விஸ்வேஸ்வரர் கோவிலில், குலச்சிறை நாயனார், குருபூஜை விழா நடந்தது. அர்த்த ஜாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஆவணி அனுஷம் நட்சத்திர நாளான நேற்று, குலச்சிறை நாயனார் குருபூஜை வழிபாடு நடந்தது. சிவாச்சாரியார்கள்,  குலச்சிறை நாயனாருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, அலங்கரித்தனர். பெரியபுராணம் பாடி, ஓதுவா மூர்த்திகளும், சிவனடியார்களும் வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !