உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுவனஞ்சூர் முத்து மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா

காட்டுவனஞ்சூர் முத்து மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா

சங்கராபுரம்: காட்டுவனஞ்சூர் முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் செய்யப்பட்டு நேற்று முன்தினம்  கரிகோலம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டு  காட்டு வனஞ்சூர், கள்ளக்குறிச்சி ரோடு மற்றும் சங்கராபுரம் கடைவீதி வழியாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !