உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர்: நாயக்கர் காலத்திய சதி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த, சுந்தரம்பள்ளியில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, 12ம்  நூற்றாண்டு நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்கு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட கல்லில், போரில் வீர மரணமடைந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவரின், இருபுறமும், இரண்டு உடன் கட்டை ஏறிய பெண்  உருவங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், நடுகல்லுக்கு, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !