உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: செப்.21 வரை பூஜைகள்

புரட்டாசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: செப்.21 வரை பூஜைகள்

சபரிமலை: கேரளாவில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 15,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. செப்.,21 வரை நடை திறந்திருக்கும். கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது. இதனால் சபரிமலையில் ஆவணி மாத பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.புரட்டாசி முதல் நாளான இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடக்கும். செப்.,21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஐந்து நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !