ராகவேந்திரர் மடத்தில் மத்வநவமி மகோற்சவம்
ADDED :5110 days ago
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் ராகவேந்திரர் மடத்தில் மத்வநவமி மகோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி வேதவியாசர், முக்யப்ராணர்(ஆஞ்சநேயர்), ஸ்ரீ மத்வர் மற்றும் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட மத்வரின் உருவப்படம் வீதியுலா நடந்தது. ஹரிவாயு ஸ்துதி குழுவினரின் பாராயணம், பாவபோதகர் மகளிர் பஜனா மண்டலி குழுவினரின் மத்வநாமாதாஸ கீர்த்தனைகள் நடந்தது. ராமகிருஷ்ணாச்சார் குண்டாச்சாரி பிருந்தாவனத்திற்கு அபிஷேக ஆராதனைகளை நடத்தினார்.