உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் திருப்பதி பிரமோத்ஸவம் 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம் திருப்பதி பிரமோத்ஸவம் 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம்: விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதி பிரமோத்ஸவத்துக்கு, முக்கிய நகரங்களில் இருந்து, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருமலை திருப்பதியில், ஆண்டு பிரமோத்ஸவம் கடந்த, 13ல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று செப்., 17ல் கருட சேவை, நாளை, தங்கத் தேரோட்டம், செப்., 20ல் திருத்தேரோட்டம், 21ல், சக்கர ஸ்நானம் நடக்கிறது. இதை முன்னிட்டு, திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்கு, கடந்த, 12 முதல் கூடுதலாக, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று(செப்.,16ல்), அதன் எண்ணிக்கை, 40, நாளை, (செப்.,18ல்)50 ஆக உயர்த்தப்படுகிறது. அவை, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து, திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. அதேபோல், அக்., 10ல் நவராத்திரி பிரமோத்ஸவம் தொடங்கி, அக்., 18 வரை நடப்பதால், தற்போது, வழக்கமான பஸ்களின் முன்பதிவு முடிந்து, சிறப்பு பஸ்களின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதில், கருட சேவை நடக்கும் அக்., 14க்கு முதல் நாள், தமிழக முக்கிய நகரங்களிலிருந்து, 50 சிறப்பு பஸ்களை இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், திருப்பதியில் நடக்கும், ஆண்டு மற்றும் நவராத்திரி பிரமோத்ஸவத்துக்கு, வழக்கமான பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வரும் நகரங்களில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு, ஆன்லைன், அதற்கான மையங்களில் நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !