திருப்போரூரில், தங்க பிள்ளையார் உற்சவம் விமரிசை
ADDED :2572 days ago
திருப்போரூர்: திருப்போரூரில், தங்க பிள்ளையார் வீதியுலா விமரிசையாக நடந்தது. திருப் போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு எதிரில், கிழக்கு மாட வீதியில் தங்க பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி வழிப்பாட்டுடன் மாத சதுர்த்தி வழிபாடு வீதியுலாவுடன் நடத்தப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 13ம் தேதி துவங்கி, நேற்று செப்., 16ல்வரை விமரிசையாக நடந்தது. பிரதான விழாவான தங்க பிள்ளையார் வீதியுலா, நேற்று முன்தினம் செப்., 15ல் இரவு, பிரத்யேக வாணவேடிக்கை, பேன்டு வாத்தியங்களுடன் நடந்தது. மாட வீதி பகுதியில் உள்ளோர் அர்ச்சனை செய்து, கந்தனுக்கு மூத்த கணபதியை வழிபட்டனர்.