குன்றக்குடியில் ருத்ர சரபேஸ்வரருக்கு லட்சார்ச்சனை
ADDED :2574 days ago
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்திற்குட்பட்ட சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி சமேத ருத்ர கோடீஸ்வரர் கோயிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ருத்ர சரபேஸ்வரருக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. இக்கோயிலில் சரபேஸ்வரர் சன்னதி முன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. லட்சார்ச்சனையையொட்டி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். 20 சிவாச்சாரியார்கள் யாகம்,பூஜையை நடத்தினர்.