பழநி கோயிலில் ஸ்தபதி ஆய்வு
ADDED :2576 days ago
பழநி:பழநி முருகன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பாதவிநாயகர்கோயில், ராஜா கோபுர சுதைகள் சேதமடைந்து ள்ளன. திருப்பணிகளை விரைவில் துவங்கி,2019ல்கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மலைக்கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க, தொல்லியல்துறை, ஸ்தபதிகள், அண்ணா பல்கலை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து அவர்களது ஒப்புதலுடன் திருப்பணிகள் துவங்க உள்ளனர்.
மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை ஸ்தபதி ஜெயராமன் மலைக்கோயிலில் மண்டபங்கள், கற்சிலைகளை ஆய்வு செய்தார்.இணை ஆணையர் செல்வராஜ்கூறியதாவது: மதுரை ஸ்தபதி ஆய்வு 2 நாட்கள் நடக்கிறது. இதேபோல தொல்லியல் துறை ஆய்வு நடத்த ப்படும். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உயர்மட்ட குழு அனுமதிபெற்று, விரைவில் பாலாலய பூஜையுடன் திருப்பணிகள் துவங்க உள்ளோம், என்றார்.