உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி உலா

திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி உலா

திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், செப்.,13ல் கோலாகலமாக துவங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று (செப்.,18) மாலை தங்கத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலையில் அனுமன் வாகனத்தில் மலையப்பசுவாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !