உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை: வேளச்சேரியில் ஆதி குரு தத்த ஷேத்திரத்தில் நவக்கிரஹ ஹோமங்கள்

சென்னை: வேளச்சேரியில் ஆதி குரு தத்த ஷேத்திரத்தில் நவக்கிரஹ ஹோமங்கள்

சென்னை: வேளச்சேரியில் அமைந்துள்ள, ஆதி குரு தத்த தலத்தில், நவக்கிரஹ ஹோமங் கள் நடக்க உள்ளன. சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ளது, கணபதி சச்சிதானந்த ஆசிரமம். அங்கு, தத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகள், 15வது சாதுர்மாஸ்ய விரதத்தை, ஜூலை, 27ல் துவக்கினார். இந்த விரதம், செப்., 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

இதில், ஸ்ரீனிவாச திருக்கல்யாணம், கிருஷ்ண ஜெயந்தி விழா, மகா மிருத்யுஞ்சய ஹோமம், மகாலட்சுமி யாகம் ஆகியவை நடத்தப்பட்டன. செப்., 20ல், சூரியன், சந்திரன், புதன், குரு கிரஹங்களுக்கும்; செப்., 21ல் செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது கிரஹங்களுக்கும், சாஸ்திர முறைப்படி ஹோமங்கள் நடத்தப் படுகின்றன. இதை முன்னிட்டு பக்தர்கள், நவதானியங்கள் தானமாக வழங்கலாம்.செப்., 28ல், சனி பகவானுக்கு தைல அபிஷேகம், எள் தானம், தீப தானம், ஹோமம் நடக்க உள்ளன. இந்த ஹோமங்களில், விஜயானந்த தீர்த்த சுவாமிகள் பங்கேற்று, சனி பகவானுக்கு, தச தானம் வழங்க உள்ளார்.அவரின் சிறப்பு உபன்யாசம், சுந்தரகாண்டம் ஆகியவை, செப்., 22ம் தேதி வரை, தினமும் மாலை, 6:30 மணி முதல், 8:30 மணி வரை நடை
பெறுகிறது.

மேலும், தத்தாத்ரேயருக்கு, தினமும் பூஜையும், ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகுகால பூஜையும் நடத்தப்படும்.

மேலும், விபரங்களுக்கு, 97907 47932, 98840 27739 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !