அந்தியூர் அருகே, பர்கூரில் 7 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :2573 days ago
அந்தியூர்: அந்தியூர் அருகே, பர்கூர் வனப்பகுதியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப் பட்ட சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. டிராக்டர் மற்றும் மினி ஆட்டோக்களில், மேளதாளத்துடன், முக்கியமான வீதிகள் வழியாக, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஊசிமலையில் உள்ள பள்ளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பர்கூர், அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பகுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.