உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோட்டில் காயத்ரி தேவி திருவீதியுலா

ஈரோட்டில் காயத்ரி தேவி திருவீதியுலா

ஈரோடு: உலக நன்மைக்காக விஸ்வகர்மா, காயத்ரி தேவி திருவீதியுலா நடந்தது. ஐந்தொழில் கள் சிறப்பாக அமையவும், ஐந்தொழிலாளர்கள் ஒற்றுமைக்கும், உலக நன்மைக்கும், உலக அமைதி வேண்டியும், ஈரோடு காரைவாய்க்கால், சுயம்பு நாகர் ஆலயம் விஸ்வகர்மா அமைப்பு சார்பில், ஆண்டு தோறும், சிறப்பு விஸ்வகர்மா, காயத்ரி தேவி வழிபாடு நடக்கிறது.

நடப்பாண்டு விழா, கடந்த, 17ல் தொடங்கியது. இதையொட்டி மஹா யாக வேள்வி, விஸ்வகர்மா, காயத்ரி தேவி திருவீதியுலா நடந்தது. காரைவாய்க்காலில் தொடங்கி கச்சேரி வீதி, மண்டபம் வீதி பெரியார் வீதி வழியாக சென்று, கோவிலில் நிறைவடைந்தது. இதில் விஸ்வகர்மா ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !