உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்

முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்

மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மார்ச், செப்டம்பரில் சில நாட்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கும்.  கோயிலில் செப்.30 வரை தினமும் காலை 6:15- – 6:25 மற்றும் 6:40- – 6:50 மணி வரை சூரியக்கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும். நேற்று மூலவரை தரிசிக்க தெப்பக்குளம் மைய மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார். இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !