உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகன்குளத்தில் சேகு வருசை முகமது தர்கா கந்தூரி விழா

அழகன்குளத்தில் சேகு வருசை முகமது தர்கா கந்தூரி விழா

அழகன்குளம்: அழகன்குளம் மகான் சேகு வருசை முகமது தர்காவில் கந்தூரி விழா நடந்தது.249வது கந்தூரி விழா செப்., 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தர்கா வளாகத்தில் அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் லுக்மான்ஹீக்கீம், செயலாளர் பசீர் அகமது, முஸ்லிம் பொது ஜன சங்கத்தலைவர் சகுபர்சாதிக், செயலாளர் செய்யது இப்ராஹிம், முஸ்லிம் ஐக்கிய ஜமாத்துகள் சபை செயலாளர் பகுருல் அமீன், பல்வேறு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் ஜமால் முகமது தீன்கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்.அழகன்குளம் ஜும்மா பள்ளிவாசல் இமாம் சிறப்பு துஆ ஓதினார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழாவில் ஆலிம்கள் சிறப்பு மவுலீது ஓதினர். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் நெய் சாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தர்கா கமிட்டி ஜமால்முகமது, அப்துல்வகாப், சேக்நூர் தீன், சேக்சபியுல்லா, உபயதுல்லா, மவுசுதீன், ஜமீல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !