உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விஸ்வஇந்து பரிஷத் கோரிக்கை

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விஸ்வஇந்து பரிஷத் கோரிக்கை

சாத்தூர்:இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் கட்சியின் மாவட்டச் செயலாளர் கலையரசன் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளார். இதன் விபரம் பின் வருமாறு: முடி காணிக்கை, தேங்காய் உடைக்க கட்டாய வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு சுகாதாரவசதி, இலவச தங்கும் விடுதி வசதி செய்து தர வேண்டும்.

முடி திருட்டு வழக்கில் தொடர்புடைய கோவில் பூசாரி அறங்காவலரை நிர்வாகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். குற்ற வழக்கில் தொடர்புடைய அறநிலையத்துறை ஊழியர்களை கோவில் பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி மனு
அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !