உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (செப்., 21ல்) செப்புதேரோட்டம் நடந்தது.

நேற்று (செப்., 21ல்)  காலை கோயிலிலிருந்து புறப்பட்ட பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, செப்பு தேருக்கு காலை 6:32 மணிக்கு எழுந்தருளினர். அங்கு கல்யாணராமபட்டர் சிறப்பு பஜைகள் செய்து, தீபாராதனை காட்டினார். திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோசத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். ஆண்டாள் கோயில் யானை முன்செல்ல கோயிலின் நான்கு வீதிகளிலும் செப்புதேர் வலம் வந்தது. வேதபிரான் சுதர்சன், மணியம் கோபி, ஸ்ரீராம், அரையர் முகுந்தன், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !