உளுந்தூர்பேட்டை பாதூர் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :2577 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை யொட்டி தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 17ம் தேதி இரவு பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது. 20ம் தேதி 6:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 21ம் தேதி காலை 7:40 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.