ஆதிதிருவரங்கத்திற்கு பக்தர்கள் நடைபயணம்
ADDED :2577 days ago
கண்டாச்சிபுரம்: மேல்காரணை பெருமாள் பக்தர்கள் கண்டாச்சிபுரம் வழாயாக ஆதிதிருவரங்கத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த,மேல்காரணை கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் பஜனைக் குழுவினர் 3ம் ஆண்டாக ஆதித்திருவரங்கத்திற்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (செப்., 21ல்) மாலை கண்டாச்சிபுரம் வருகை தந்த பஜனைக் குழுவினரும், பக்தர்களும் கண்டாச்சிபுரம் கடைவீதி மற்றும் வீதிகளில் பஜனைப் பாடல்களை பாடிச்சென்றனர். மூன்று குழுக்களாக சுமார் 50க் கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.