உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவ விழா வின் இரண்டாம் நாளான நேற்று (செப்., 21ல்) யாகசாலை பூஜைகள் நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் (செப்., 20) திருபவித் ரோத்சவ விழா துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று (செப்., 21ல்) காலை 5:00 மணிக்கு, மூலவர் பெருமாள் விஷ்வரூப தரிசனம் 5:30 மணிக்கு, திருவாராதனம் காலை 7:00 மணிக்கு திருவோணத்தை முன்னிட்டு வாமணர்க்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

காலை 8:00 மணிக்கு‚ ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் புஷ்பவல்லி தாயார் சக்கரத் தாழ்வார் பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமிக்கு பவித்திர மாலை அணிவிக் கப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது. ஹாமம் நான்காயிர திவ்யபிரபந்த வேத பாரா யணம் சேவை சாற்றுமறை பூர்ணாஹீதி நடந்தது.

ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24ம் தேதி மாலை சுவாமிக்கு புஷ்பயாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !