உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சிக்கலய விழா

அவலூர்பேட்டையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சிக்கலய விழா

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர கஞ்சிக் கலய விழா, அம்மா அவதார திருவிழா மற்றும் மன்ற ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.

காலையில் திருப்பள்ளி எழுச்சியும், சிறப்பு அலங்காரத்தில் கூட்டு வழிபாடும், சக்தி கொடி ஏற்றமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மாவட்ட செயலர் பரத்குமார் வழங்கினார்.

முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நடராஜன், கலாராஜவேலாயுதம், பழனி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை, பிரபாகரன், அண்ணாமலை, வாசு, செல்வம் முன்னிலை வகித்தனர். மன்ற பொறுப்பாளர் முத்து
கிருஷ்ணன் வரவேற்றார்.

ஊர்வலத்தில் உலக நன்மைக்காக கஞ்சி கலயம், அக்னி சட்டி, முளைப்பாரி, பால் குடங்களை ஏந்தி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !