உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனூர் காந்திநகரில் ராஜயோக தியான பயிற்சி

சின்னமனூர் காந்திநகரில் ராஜயோக தியான பயிற்சி

சின்னமனூர்: சின்னமனூர் காந்திநகரில் ராஜயோக தியானம் குறித்த அறிமுக வகுப்பு நடந்தது.
தேனி மைய பொறுப்பாளர் விமலா தலைமை வகித்தார். சின்னமனூர் கிளை நிர்வாகிகள் சுரேஷ், ஜெயக்குமாரி முன்னிலை வகித்தனர். விமலா கூறுகையில், வாழ்வில் ஆனந்தம், அன்பு, அமைதி ஆகியவற்றை தியானத்தின் மூலம் அடையலாம். வாழ்வில் அமைதி, குடும்ப வாழ்க்கையை புரிந்து கொள்ளுதல், சுமுதாய ஒற்றுமையை இறை நினைவில் தியானத்தால் பெறலாம், என்றார். ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !