உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி தாலுகாவில் கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு

தேனி தாலுகாவில் கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு

தேனி;சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேனி தாலுகாவில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்ட கோயில்களில் நீதிபதிகள் நேற்று (செப்., 21ல்) ஆய்வு மேற்கொண்டனர்.

இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட கோயில்களில்  தரிசனமுறைகள், பக்தர்களுக்கு தேவையான பொதுசுகாதாரம், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வரவு செலவு கணக்குகள் சரியாக உள்ளனவா என தேனி மாவட்டத்தில் உள்ள 340 கோயில்களில் ஆய்வு செய்யும் படி, மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி நேற்று (செப்.,21ல்) தேனி தாலுகாவில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உட்பட 30 கோயில்களில் முதல்கட்டமாக 26 கோயில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி செந்தில் குமரேசன் தலைமையில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன், உரிமையியல் நீதிபதி பால்பாண்டி, சார்பு நீதிபதி குமரேசன் உள்ளிட்ட நீதிபதிகள் கோயில்களில் உள்ள தரிசன முறைகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வரவு, செலவு உள்ளிட்டவை களை ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !