புதுச்சேரி முருங்கப்பாக்கம் ராமானுஜ மடத்தில் புரட்டாசி திருவிழா
ADDED :2578 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனை மடத்தில், 14ம் ஆண்டு புரட்டாசி திருவிழாவை யொட்டி, கருட சேவையில் சாமி வீதியுலா இன்று (செப்., 21ல்) நடக்கிறது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனைமட கோவிலில், 14ம் ஆண்டு புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது.
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று (22ம் தேதி) காலை 7:00 மணியளவில் திருமாலுக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சர்வ அலங்காரத்தில் திருமால், கருட சேவையில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.