புதுச்சேரி ஜெபமாலை அன்னை ஆலயம் திறப்பு விழா
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட புனித ஜெபமாலை அன்னை ஆலயம் நேற்று (செப்.,21ல்) திறக்கப்பட்டது.
முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியில் 154 ஆண்டு பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (செப்., 21) மாலை 5:30 மணியளவில் நடந்தது.
புதுச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர், புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திறந்து திருநிலைப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் சிறப்பு ஆசிர் வழங்கப்பட்டது. ஆலய திறப்பு விழாவில் பங்கேற்ற விருந்தினர் கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களை பேராயர் கவுரவபடுத்தி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பங்கு தந்தை கள், உயர் மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அருட்கன்னியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அகஸ்தே, பள்ளி முதல்வர்கள், திருப்பணிக்குழு, பங்கு பேரவையின், பங்கு மக்கள் செய்தனர்.