திருப்பூர் ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2577 days ago
திருப்பூர்: ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமதே ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா, ஏ கிராண்ட் மஹாலில், 24ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் கே.ஜி.எஸ்., குழுமம் சார்பில், ஆண்டு தோறும் ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமதே ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது. வரும், 24ம் தேதி, நான்காம் ஆண்டு, பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா, ரிங் ரோட்டிலுள்ள செட்டிபாளையத்தில் உள்ள, ஏ கிராண்ட் மஹாலில் நடக்கிறது.
வரும், 24ம் தேதி காலை, 7:00 மணி முதல், 12:30 மணி வரை, பத்மாவதி தேவிக்கும், ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும் திருகல்யாண உற்சவம் நடக்கிறது. மதுரை கோமடம் சுவாமி தலைமையில், திருக்கல்யாண உற்வச பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கே.ஜி.எஸ்., குழும இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.