பொங்கலூர் ராமசாமி கோவிலில் இன்று (செப்., 22ல்) சிறப்பு வழிபாடு
பொங்கலூர்:புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பொங்கலூர் ராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் நெரிசல் இன்றி, பாதுகாப்பாக சென்று சுவாமியை தரிசிக்க வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில், மூங்கில் தடுப்பு அமைக்கப் பட்டுள்ளது. குடிநீர் மற்றும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்துக்கு அருகில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருந்தொழுவு விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், காட்டூர் சென்றாய பெருமாள் கோவில், புத்தரசல், கொடுவாய், குள்ளம்பாளையம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதேபால், மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், விசேஷ பூஜைகள் மற்றும் வழிபாடுள் நடக்கிறது.