முதுகுளத்தூர் விநாயகர் கோயிலில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா
ADDED :2577 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மு.சாலை கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், முனியப்பசாமி, காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா நடைபெற்றது.
காலையில் பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோயில் வந்தனர். பின்னர் பால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
காளியம்மன் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.