உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லாங்குடியில் பக்தர்கள் வினோத காணிக்கை

கொல்லாங்குடியில் பக்தர்கள் வினோத காணிக்கை

காளையார்கோவில்: கொல்லங்குடி கோயிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் பூட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்..

காளையார்கோவில் அருகேயுள்ள கொல்லாங்குடி வெட்டுடையார் காளி கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்குள்ள கருப்புசாமி சன்னதியில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் நீண்ட அரிவாளை காணிக்கையாக வழங்குகின்றனர்.

அவை சுவாமி சிலை முன் வைக்கப்படுகிறது.இதன் அருகே உள்ள சூலாயுதத்தில் சமீப காலமாக பக்தர்கள் பூட்டுக்களை வாங்கி வந்து காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பூட்டுக்களை அங்குள்ள வளையங்களில் மாட்டி, பூட்டிய பிறகு சாவியை கோயிலின் உண்டியலில் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், கருப்பசாமி சன்னதியில் நாளுக்கு நாள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பூட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோயில் பணியாளர் ஒருவர் கூறுகையில், ""வெட்டுடையார் காளியிம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏதாவது ஒரு நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கையுடன் தான் வருவார்கள்.

வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர் காலி செய்ய மறுத்தால் அவர்களுடன் வாதிட்டு, கோர்ட்டுக்கு அலைய நேரிடும்.

பல வருடங்கள் ஆனாலும் வழக்கு முடிவுறாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு பூட்டை விலைக்கு வாங்கி வந்து இங்குள்ள

கருப்பசாமி சன்னதி முன் கம்பியில் பூட்டி விட்டு சாவியை உண்டியலில் போட்டு விடுகிறார்கள்.

சிலர் பூட்டுகளை பூட்டி விட்டு சாவியை எறிந்து விடுகிறார்கள். பிரச்னை தீர்ந்தவுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அரிவாள் காணிக்கை  செலுத்துகிறார்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !