ஈரோட்டில் துறவறம் ஏற்கும் இளம்பெண் ஜெயின் சமூகத்தினர் மரியாதை
ஈரோடு: துறவறம் ஏற்கவுள்ள இளம்பெண்ணை, ஜெயின் சமூகத்தினர், குதிரை மீது அமர வைத்து ஊர்வலமாக, அழைத்து சென்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஜெயின். இவரது மனைவி இந்து பாலா. 40 ஆண்டுகளுக்கு முன், ஈரோட்டில் குடியேறினர். தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுவேதா, 24, பி.காம்., பட்டதாரி. ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவர். சுவேதா, துறவறம் செல்ல, பெற்றோரிடம் அனுமதி கேட்க, அவர்களும் சம்மதம்தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோட்டில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர், சுவேதாவை வெள்ளை குதிரையில் ஏற்றி, பூரண அலங்காரம் செய்து, நேற்று செப்., 23ல் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
குதிரை மீது அமர்ந்து சென்ற சுவேதா, சாலையில் நின்ற மக்கள் மீது, இனிப்பு பதார்த்தங்களை வீசினார். ஜன., 19ல், குஜராத் மாநிலத்தில், ஒரு ஜெயின் கோவிலில், சுவேதா துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி நடக்க இருப்பதாக, ஜெயின் அமைப்பினர் தெரிவித்தனர்.