விழுப்புரம் வளவனூர் பிரம்மாகுமாரிகள் இயக்கம் புகைப்பட கண்காட்சி
ADDED :2570 days ago
விழுப்புரம்: வளவனூர் பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.
வளவனூர் மேற்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஆன்மீக சேவை செய்து வருகிறது.
இங்கு, தினமும் காலை மற்றும் இரவு ஞான உபதேசம், தியான பயிற்சி இலவசமாக அளிக்கப் படுகிறது.பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வளவனூர் குமாரக்குப்பம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆன்மீக புகைப்பட விளக்க கண் காட்சி நடந்தது. இதை வளவனூர் சுற்றுப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
தொடர்ந்து, ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் கண்காட்சி நடக்கும் என பிரம்மாகுமாரிகள் இயக்கம் நிர்வாகி செல்வ முத்துக்குமரன் கூறினார்.