ஒடிசா மாநிலம், புரியில் ஜகன்னாதர் கோவிலில் ஆய்வு
புரி: ஒடிசா மாநிலம், புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், பூஜைகள் செய்யும் சேவையில், பரம்பரை பரம்பரையாக தொடர்வது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தினார். முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ள, ஒடிசாவின் புரி நகரில் உள்ளது, ஜகன்னாதர் கோவில்.
நியமனம் : புகழ்பெற்ற இந்தக் கோவிலில், ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே, பரம் பரை பரம்பரையாக, பூஜைகள் செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பக்தர்களிடம், பணத்தை அதிகமாக பறிப்பதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலில், 12 அம்ச திட்டங்களை செயல் படுத்தும் படி, ஜூலையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆராய்ந்து, கோவிலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, அமிகஸ் கியூரி எனப் படும் நீதிமன்றத்துக்கு உதவுபவராக, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை, உச்ச நீதிமன்றம் நியமித்தது.அதன்படி, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனைகளை நடத்தினார். இது குறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:கோவிலில் பூஜை செய்யும் சேவையில், பரம்பரை பரம்பரையாக ஈடுபடுவது தொடரலாம். ஆனால், தற்போது, அதிக எண்ணிக்கையில் பூசாரிகள் உள்ளனர்.
ஆலோசனை : அதனால், இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என, கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவ்வாறு அதிகமாக உள்ளவர்களுக்கு இழப்பீடு அளிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத் தலாம் என, அவர் கூறியுள்ளார். விரைவில் அவர், தன் அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.