சென்னையில் கொண்டாடிய கதகளி திருவிழா
ADDED :2569 days ago
சென்னை: திருவான்மியூர், கலாஷேத்ராவில் உள்ள ருக்மணி அருண்டேல் அரங்கில், 10ம் ஆண்டு கதகளி திருவிழா, சிறப்பாக நடந்தது. கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளியை, சென்னை ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், திருவான்மியூரில் உள்ள, கலாஷேத்ரா பவுண் டேஷன் சார்பில், ஆண்டுதோறும், கதகளி திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 10ம் ஆண்டு கதகளி திருவிழா, செப்., 17 முதல், 21 வரை, கலாஷேத்ராவில் உள்ள ருக்மணி அருண்டேல் அரங்கில் நடந்தது. கேரளா கலாமண்டலம் குழுவினர், நளசரிதம், சீதா சுயம்வரம், உத்ரா சுயம்வரம், கீச்சக வதம் மற்றும் வாலி வதம் ஆகிய அத்தியாயங்களை, கதகளி நிகழ்ச்சிகளாக, ஐந்து நாட்கள் வழங்கினர்.நிகழ்ச்சி நடந்த, ஐந்து நாட்களும், அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கதகளி நிகழ்ச்சியை, பார்வையாளர்கள், வெகுவாக ரசித்தனர்.