உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் இயற்கை வளம் மேம்பட கோ பூஜை

உடுமலையில் இயற்கை வளம் மேம்பட கோ பூஜை

உடுமலை:உடுமலையில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில், இந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி, துளுவ வேளாளர் மண்டபத்தில் நடந்தது. அதில், ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் மாரி
முத்து பேசுகையில், இளைய தலைமுறைகளுக்கு நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாறு சொல்லி வளர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களே நமது நாட்டின் எதிர்காலமாகும்.
தேசத்தை பிடிப்புடன் வைத்திருப்பதில் ஆன்மிகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களும் ஆன்மிக சிந்தனையில் ஈடுபட வேண்டும், என்றார்.நிகழ்ச்சியில், முன்னதாக கணபதி ஹோமமும், கோ மாதா பூஜையும் நடைபெற்றது. கோ பூஜையில் பசுவுடன் கன்று சேர்த்து பூஜை செய்யப்பட்டது. மேலும், விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !