உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

உடுமலையில் ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

உடுமலை: உடுமலை, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், ஆடிப்பூர கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட் வழிபாட்டு மன்றத்தில், கஞ்சி கலய நிகழ்ச்சி, கடந்த 21ம்தேதி கலச விளக்கு வேள்வி பூஜையுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, 22ம் தேதி, மாலையில், பக்தர்கள் பூச்சட்டி எடுத்து வழிபட்டனர். நேற்று (செப்., 23ல்), பக்தர்களின் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் காலை, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் துவங்கி, பகல் 12:00 மணிக்கு ஆண்டாள் சீனிவாசன் லே- அவுட் மன்றத்தை வந்தடைந்தது. ஊர்வலகத்தில், ஏராளமான பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்து வந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !