ராமேஸ்வரம் கோயிலில் காணிக்கை ரூ.63 லட்சம்
ADDED :2869 days ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் 63 லட்சத்து 35 ஆயிரத்து 95 வருவாயாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 26 நாள்களுக்கு பிறகு நேற்று சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி,பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ.63 லட்சத்து 35 ஆயிரத்து 95 ஆயிரமும், தங்கம் 23.5 கிராம். வெள்ளி ஒருகிலோ 900 கிராம் காணிக்கையாக கிடைத்தது. எண்ணும் பணியில் ராமேஸ்வரம் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.