விருதுநகர் ரெங்கநாத சுவாமி- மகாலட்சுமி திருக்கல்யாணம்
ADDED :2567 days ago
விருதுநகர்: விருதுநகர் பஞ்சுப் பேட்டை ரெங்கநாதசுவாமி கோயிலில் பஞ்ச தின பிரம்மோற்ஸவ திருக்கல்யாண விழா செப்.20 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் மகமை மண்டபங்களில் தேவியர்களுடன் அரங்கநாதன் எழுந்தருளினார். கருட, சேஷ, யானை வாகனங்களில் சுவாமி வீதி வலம் வந்து அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான ரெங்கநாத சுவாமி- மகாலட்சுமி திருக்கல்யாணம், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேவஸ்தான மண்டபத்தில் இரவு 7:30 மணிக்கு மேல் நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர். சங்கரன்கோயில் சங்கரநாராயணன் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.