புரிசை பெருமாள் கோவில் நிலம் ஏலம் விட கோரிக்கை
ADDED :2568 days ago
புரிசை: கரிய மாணிக்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஏலம் விட வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் ஒன்றியம், புரிசை கிராமத்தில், கரிய மாணிக்கப்பெருமாள் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலுக்கு சொந்தமான, 18 ஏக்கர் நிலம் மூலமாக, ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வந்தது.
நடப்பாண்டிற்குரிய ஏலம் இன்னும் விடவில்லை. அதிகாரிகளும், ஏலம் விடுவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. இது குறித்து, புரிசை கிராமத்தினர் கூறியதாவது:ஆடி பட்டத்திற்கு முன், கோவில் நிலங்களை குத்தகைக்கு ஏலம் விடுவது வழக்கம். நடப்பாண்டு, ஆடி பட்டம் முடியும் தருவாயிலும், கோவில் நிலங்கள் ஏலம் விடப்படவில்லை. இதனால், நிலம் பெற முடியாமல், பயிரிடப்படாமல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.