சேலம் ராஜகணபதிக்கு மலர் அலங்காரம்
ADDED :2873 days ago
சேலம்: சேலம், ராஜணபதி கோவில் விநாயகருக்கு, நேற்று வண்ண பூக்களால் சிறப்பு பூஜை நடந்தது. சேலம், ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த, 13ல் துவங்கி நடந்து வருகிறது. 12ம் நாளான நேற்று வசந்த உற்சவம் நடந்தது. இதில், காலையில் விநாயகருக்கு, 1,008 லிட்டர் பால் அபி ?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ?ஹாமம் நடந்தது. பின்னர், பல்வேறு மலர்களால் ராஜகணபதி விநாயகருக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.