உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாகம் தணிந்த நேசம்

தாகம் தணிந்த நேசம்

அந்த காட்டில் இரு மான்கள் இருந்தன.   அவைகள்  தாகத்தால் வாடின. ஒன்றை ஒன்று தேற்றியபடி ஒரு நீர்நிலையை அடைந்தன. ஆனால் அங்கு தாகத்தை தணிக்கும் அளவில் நீர் இல்லை.  ஏமாற்றம் என்றாலும் சமாளித்துக் கொண்டு பெண்மான் குடிக்கட்டும் என ஆண்மான் காத்திருந்தது. இதைப் பார்த்த பெண்மானும், ’ஆண்மான் குடிக்கட்டும்’ என நினைத்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து இரண்டும் ஒரே நேரத்தில் நீரில் வாய் வைத்தன.  நேரம் ஓடியதே தவிர தண்ணீர் குறையவில்லை. பின்னரே அவை நீர் குடிப்பது போல் பாசாங்கு செய்தது தெரியவந்தது.  தான் நாவறட்சியால் உயிர் விட்டாலும் பரவாயில்லை; தன் இணையின் தாகம் தீர வேண்டும் என்ற நேசத்தில் ஒன்றை ஒன்று விஞ்சின.  அந்த அன்பின் ஆழத்திற்கு சாட்சியாக மழை பொழிந்தது. மான்களின் தாகம் தணிந்ததோ இல்லையோ நேசத்தின் தாகம் தணிந்தது ’ஒருவன் தன் சினேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்துமில்லை’.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !