கார்த்திகை மாத விழா
ADDED :2565 days ago
""கார்த்திகை தீபத் திருவிழா
சுவாமி சன்னிதி கொடிமர கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறும் பத்து நாள் விழாவாகும். திருவாதிரை நட்சத்திரத்துடன் முடிவு பெறும் இவ்விழாவில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்த வாரி நடைபெறும் 6,7, மற்றும் 10ம் நாள் விழாவில் சுவாமி ரிஷப வாகனத்தில் ஆடி வீதிகளில் எழுந்தருளி அருள்புரிவார். ஆலயம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சிவபிரான் திரு அண்ணாமலையில் ஆதி அந்தமில்லா அடிமுடி காணா செஞ்சோதி பிழம்பாக நின்ற கோலத்தினை விளக்கும் சிறப்பு விழாவாகவும் கொண்டாடுவர்.